ஆரம்பிக்கலாங்களா: கமல்ஹாசனின் 232வது படத்தின் டைட்டில் டீசர்! 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கமல்ஹானின் 232வது படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி உள்ளது

இந்த டீசரில் படத்தின் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு நிமிடத்திற்கும் மேலாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமலஹாசன் ஒரு சிலரை விருந்துக்கு அழைப்பது போலவும், விருந்துக்கு வந்தவர்களை வதம் செய்வது போலவும் இருக்கும் காட்சிகளும், ’ஆரம்பிக்கலாங்களா’ என்ற வசனத்தை தொடர்ந்து அவர் தனது வதத்தை ஆரம்பிக்கும் காட்சிகள் உள்ளன

முன்னதாக அவர் ஆங்காங்கே துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் ஒளித்து வைக்கும் காட்சிகளும் உள்ளன. மொத்தத்தில் இந்த இரண்டு நிமிட வீடியோ கமல்ஹாசனின் அடுத்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்

குறிப்பாக இந்த படத்திற்கு பல டைட்டில்கள் சமூக வலைதளங்களில் ஊகங்களாக கூறப்பட்ட நிலையில் ’விக்ரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ’விக்ரம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ஒன்று கடந்த 1986ஆம் ஆண்டு வெளியானது என்பது தெரிந்தது

More News

பாலாஜியுடன் அடிதடியை தவிர்த்தேன். வேல்முருகன் கூறும் அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய வேல்முருகன் உள்ளே நடந்த பல விஷயங்களை கூறியது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. குறிப்பாக பாலாஜி குறித்தும்,

கேப்டன்சிக்கு தகுதியே இல்லாதவர் வீராட் கோலி… காட்டம் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!!!

2020 ஐபில்எல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

நீர் மேலாண்மையில் முதலிடம் பெற்ற தமிழகம்… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!!!

தமிழகம் நீர் மேலாண்மையின் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் கேட்ட கேள்வியும் சமயோசிதமாக கமல் அளித்த பதிலும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன் தோன்றும் நாட்கள் என்பதால் மற்ற நாட்களை விட கூடுதல் சுவராஸ்யமாக இருக்கும்

நிஜமாவே பெண்கள் முறத்தால் புலியை விரட்டி இருப்பாங்களோ??? பழமொழியை நிரூபிக்கும் புது கண்டுபிடிப்பு!!!

வீரம் என்ற வார்த்தைக்கு பெரும்பாலும் ஆண்களையே கைக் காட்டுகிறோம். 21 ஆம் நூற்றாண்டில் இந்த கணிப்பு தவறு எனப்பல நேரங்களில் சொல்லப்பட்டாலும்