சிறுமி ஆசிஃபாவின் ஆன்மாவிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 8 பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் பாஜகவினர் மட்டும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு இதுபோல் நடந்திருந்தால் இதுபோல் செய்வீர்களா? ஒரு மனிதனாக, ஒரு தந்தையாக, ஒரு குடிமகனாக ஆசிபாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு ஆத்திரப்படுகிறேன். ஆசிபா, உன்னை பாதுகாக்க தவறியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இருப்பினும் உனக்காக நீதிகேட்டு போராடுவேன். குறைந்தபட்சம் உன்னை போல் வேறு ஒரு சிறுமிக்கு இதுபோன்ற நிலை வராமல் பார்த்து கொள்வேன். எங்களை மன்னித்துவிடு, உன்னை மறக்க மாட்டோம்' என்று உணர்ச்சிப்பெருக்குடன் பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் டுவிட்டர் பயனாளிகளின் ஆதரவு பெருகி வருகிறது. பெரும்பாலானோர் தங்களுடைய கோபத்தை டுவீட் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com