சுப்பிரமணியன் சுவாமியின் கிண்டலுக்கு கமல்ஹாசன் பதிலடி
Send us your feedback to audioarticles@vaarta.com
மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்தபோதிலும் சமூக வலைத்தளங்களில் அதுகுறித்த கருத்து மோதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்று கருத்து கூறினார். இதற்கு பதில் கூறிய சுப்பிரமணியன் சுவாமி, கமலின் கருத்து முட்டாள்தனமானது என்று கூறி கமல் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை நேற்று பார்த்தோம்
இந்நிலையில் இன்று கமல், தனது சமூக வலைத்தளத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு தரும் பதிலடியாக கூறியபோது, 'நான் என்றும் தமிழன். நான் மட்டுமின்றி காமராஜர், அண்ணா, ராஜாஜி, என்னுடைய தந்தை ஆகியோர்களும் தமிழர்கள்தான்.
மகாத்மா காந்தியே மக்களை நேரில் சந்தித்தவர். சீசர் கூட மக்களுக்கு முன்பு தன்னடக்கத்துடன் தான் இருந்தார். ஏன் முதல்வர் மக்களை சந்தித்திருக்க கூடாது' என்று பதிலளித்தார்.
மேலும் இனிமேல் சு.சாமிக்கு பதில் சொல்லப்போவதில்லை என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.
— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2017
Decided not 2 answer samis insinuations.Take over T.porikkis u R in g8 company.Kamraj Anna Rajaji my father & more மோதி மதித்து விடு பாப்பா
— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments