கட்சி கொடியை ஏற்றினார் கமல்: கொடியின் நிறங்கள் என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,February 21 2018]
நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் சற்றுமுன்னர் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றினார். அவரது கட்சியின் கொடி தூய வெள்ளை நிறத்தில் இணைந்த கைகளின் சின்னம் உள்ளது. கட்சியின் கொடி போலவே அவரது உள்ளமும் தூய்மையுடன் இருப்பதாகவும், கரங்களுடன் ஒன்றிணைந்து இருப்பது அவர் மக்களுடன் ஒன்றிணைவதை குறிப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை கமல் அறிவிக்கவுள்ளார்.
நாம் சமைக்கவிருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை தான் இந்த கூட்டம். இந்த சோற்றுப்பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டு பாருங்கள். விரல் சுடும். ஊழலில் தோய்ந்தே குறுகிய உங்கள் விரல் சுடும். பல நாட்களாக நிகழ்ந்து வரும் அநியாயங்களை பார்த்து பொங்கி வந்த சோறு இது. அந்த சோற்றுப்பானையின் ஒரு சோற்று பதம் இது
தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும், இதுபோல் பல கூட்டங்கள் நிகழ இருக்கின்றன . இத்தனை ஆண்டுகளாக காத்திருந்த பொறுமைக்கு நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். டெல்லியில் இருந்து நமது விருந்தினராக வந்திருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மேடைக்கு அழைக்கின்றேன்.
வணக்கம், கட்சியின் பெயரை சொன்ன பின்னர் கரகோஷங்கள் எழுப்புங்கள். இது மக்களுக்கான கட்சி,. நான் தலைவன் அல்ல, உங்கள் கருவி. இது தலைவர்கள் நிறைந்த கூட்டம். இந்த மக்கள் கட்சியின் பெயர் 'மக்கள் நீதி மையம்'
விழா மேடையில் கமல் நடுவிலும் வலது புறம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும், இடதுபுறம் தமிழக ஆம் ஆத்மி தலைவர் அவர்களும் அமர்ந்துளனர். மேலும் இதே மேடையில் தமிழக விவசயிகள் சங்கத்தலைவரும் பி.ஆர்.பாண்டியன் அமர்ந்துள்ளார்
தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படுகிறது. மேடையில் உள்ளவர்களும் தொண்டர்களும் எழுந்து நிற்கின்றனர்.
கமல் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளர்: தங்கவேல்
கமல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்
மதுரை மாவ்ட்ட செயலாளர் மணி
தஞ்சை - எம்.எஸ்.கண்ணன்
கோவை - தங்கராஜ்
தென்சென்னை - கிருபாகரன்
நாமக்கல் - மணி
சிவகெங்கை - கமல் வைத்தி
கன்னியாகுமரி - நாராயணன்
கடலூர் - சரவணன்
திருச்சி - மெய்யப்பன்
கரூர் - ராஜமாணிக்கம்
நெல்லை - மகேஷ்
திண்டுக்கல் - சிவா
மகளிர் அமைப்பு - முசிகா
மத்திய சென்னை - விசுவநாதன்
காஞ்சிபுரம் - கண்ணன்
புதுச்சேரி - கமல்ராஜ்
நாகப்பட்டினம் - ஸ்ரீராம்
ஓசூர் - ரவிச்சந்திரன்
தர்மபுரி - சுசிபாலன்
விருதுநகர் - சுரேந்திரன்
ராமநாதபுரம் - ரஞ்சித்
திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜோதி கமல்ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர் ஓட்டமாக இளைஞர்கள் இந்த ஜோதியை கடந்த சில நாட்களாக கொண்டு வந்தனர்
காணொலி மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயன், கமல்ஹாசனுக்கு வாழ்த்து:
கமல் கட்சியில் இணைந்த பிரபலங்கள்:
கவிஞர் சினேகன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், ஜல்லிக்கட்டு போராளி ராஜேஷ், நகைச்சுவை நடிகர் வையாபுரி,
கமல்ஹாசன் கட்சியில் நடிகர் நாசர் மனைவி கமீலாவுக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி.
மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் அறிவிப்பு
மகேந்திரன்
அருணாசலம்
பேரா. கு.ஞானசம்பந்தன்
சுகா தங்கவேலு
பாரதி கிருஷ்ணக்குமார்
நடிகை ஸ்ரீப்ரியா
ராஜ்குமார்
கபிலா நாசர்
சவுரிராஜன்
ராஜசேகரன்
சி.கே.குமாரவேல்
மூர்த்தி
மவுரியா
ராஜநாராயணன்
ஆர்.ஆர்.சிவா