'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி கடந்த இரண்டு வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாக வெளிவந்த அதிகாரபூர்வ செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை அவரது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 'விஸ்வரூபம் 2' படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களின் ஃபர்ஸ்ட்லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி 'விஸ்வரூபம்' முதல் பாகம் பார்த்து ரசித்த அனைவருக்கும் இனிப்பான செய்தியாக உள்ளது.
கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Happy to anounce:
— Kamal Haasan (@ikamalhaasan) May 2, 2017
Today 7pm Vishwaroop 2 Hindi first look poster & Vishwaroopam Tamizh Telugu 1st look posters release Exclusively for you
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com