சிவாஜி பேரன் படத்தில் கமல் கேரக்டர் என்ன?

  • IndiaGlitz, [Saturday,March 19 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமார் மகனுமாகிய துஷ்யந்த் தயாரித்து வரும் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள வேடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தில் பில்லிசூனியத்தை விடுவிக்கும் கேரக்டரில் நடித்துள்ளாராம். இந்த படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களுக்கு கமல்ஹாசன் கேரக்டர் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தனது பகுதிக்கான காட்சிகளை வெறும் இரண்டு மணி நேரங்களில் நடித்து கொடுத்துவிட்டதாகவும், அவரது பகுதி சிறப்பாக வந்துள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் ஆஸ்னா ஜாவேரி ஹீரோயினியாக நடிக்கின்றார். இளையதிலகம் பிரபு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.