ஜூலி எண்ட்ரியால் கலகலப்பான பிக்பாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இளம்பெண் ஜூலி. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா, பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு எதிராக அவர் போட்ட கோஷம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் தலைப்பு செய்தியாகியது.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடத்தும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 நபர்களில் ஒருவராக ஜூலி அறிவிக்கப்பட்டதும், திரைத்துறையை சேராத ஒரே நபர் ஜூலி என்பதால் ஜூலியின் எண்ட்ரியை கொண்டிருந்தவர்கள் சுறுசுறுப்பானார்கள். மேலும் புரட்சி பெண் ஜூலி கலந்து கொள்வதால் நிகழ்ச்சி வித்தியாசமாகவும் புரட்சிகரமாகவும் இருக்கும் என்று பலர் நினைத்தனர்.
அனைவரின் எதிர்பார்ப்பின்படியே மெரீனாவில் கரகோஷம் செய்த ஜூலி, பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என்று கூறி அதுவரை சாதாரணமாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். மேலும் இளம் நடிகர் ஸ்ரீயிடம் சகஜமாக பேசி டென்ஷனாக ஸ்ரீயையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். முதல் நாள் நிகழ்ச்சி சாதாரணமாக சென்று கொண்டிருந்த நிலையில், ஜூலி எண்ட்ரி ஆனதும் நிகழ்ச்சி கலகலப்பாக்கியுள்ளதால் இனிவரும் நாட்களில் நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments