close
Choose your channels

தினமும் 20 மணி நேரம் கமல் வேலை செய்வது ஏன் தெரியுமா?

Thursday, December 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்து கொண்டு 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளை செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும்போது இதனை கமல்ஹாசனே குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஸ்வரூபம் 2' படத்தின் கிராபிக்ஸ் மற்றும் சவுண்ட் பணிகளை திட்டமிட்டபடி முடிக்க தினமும் 15 நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் தான் கமல் இருந்தாராம். ஆனால் தற்போது அவர் தினமும் 20 மணி நேரம் வேலை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

வெறும் 4 மணி நேரம் மட்டுமே தினமும் தூங்கினாலும், படம் திருப்தியாக வந்துள்ளது என்பது அவரது முகத்தில் தெரியும் உற்சாகம் காட்டிக்கொடுப்பதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆடியன்ஸ்களின் திருப்திக்காக கமல் எத்தகைய கடினமான பணிகளை செய்பவர் என்பதும் ஆடியன்ஸ்களின் பாராட்டுக்களை தவிர வேறு எதுவும் ஒரு படைப்பாளனுக்கு முக்கியம் இல்லை என்பதை அவர் பல நேரங்களில் கூறியிருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஸ்வரூபம் 2'  படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கமல்ஹாசனின் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment