பாமகவின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்த கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,April 06 2017]

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்த தீர்ப்பால் நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் தமிழகத்தில் 3000க்கும் அதிகமான மதுக்கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றிவிட்டு, டாஸ்மாக் கடைகளை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக குரல் கொடுத்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை தாக்கல் செய்த கே.பாலு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இன்று காலை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசி தமிழக அரசின் இத்தகைய முயற்சிகளை தடுக்க ஆதரவு கோரி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கமல்ஹாசனையும் கே.பாலு அவரது ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து கே.பாலு கூறியவதாவது:
"எங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்டச் சாலைகளாக மாற்றுவது குறித்து, அவருடைய கருத்தையும் எங்களிடம் தெரிவித்தார். அவர் பேசும்போது, 'வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான் என்பது முதுமொழி. இங்கு குடி உயர்வதைத்தான் கோன் (அரசு) விரும்புகிறது. சாமானிய மக்கள் குடித்தே, தங்களை அழித்துக் கொள்கிறார்கள். அரசுக்கு வருமானம் பிரதானமாக இருக்கிறது. தனிநபர்களின் உடல்நலம்தான் பாதிக்கப்படுகிறது' என வேதனை தெரிவித்தார். மதுவுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிகளை வரவேற்பதாகவும் கூறினார்" என்றார் பாலு.

More News

விக்ரம்-தமன்னா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

சீயான் விக்ரம் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார்.

ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்த முக்கிய கட்சியின் தலைவர்

அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுக தொண்டர்களின் அமோக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்.கே. நகர் தேர்தலுக்கு பின்னர் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலர் ஓபிஎஸ் அணியின் பக்கம் திரும்ப வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றன

பகலவன் - கோபம்: இயக்குனர் சீமானின் அடுத்தகட்ட 2 திட்டங்கள்

பிரபல இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், கடந்த சில வருடங்களாக முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு 'வாழ்த்துக்கள்' படத்தை இயக்கிய அவர் தற்போது மீண்டும் 9 வருடங்களுக்கு பின்னர் இயக்குனர் துறைக்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்...

ஹாட்டாக இருந்தாலும் ஹேப்பியாக இருக்கின்றேன். விஜய் பட நாயகி நித்யாமேனன்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக இந்த படத்தின் நாயகி நித்யாமேனன் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் சென்றடைந்தார்...

50 மாணவர்களுக்கு திருக்குறள். சென்னை ஐகோர்ட் நீதிபதி வழங்கிய வித்தியாசமான தீர்ப்பு

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஒருவர் சமீபத்தில் குற்றவாளி ஒருவருக்கு கருவேல மரங்களை அழிக்கும் தண்டனை கொடுத்த நிலையில் இன்னொரு தீர்ப்பில் 50 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது