அக்சராஹாசனுடன் 'விவேகம்' படம் பார்த்த கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த விமர்சனங்கள் திருப்தி அளிக்கும் வகையில் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை இன்று மகள் அக்சராஹாசனுடன் பார்த்ததாக சமூக வலைத்தளத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.
அக்சராஹாசனின் முதல் தமிழ்ப்படமான 'விவேகம்' படத்தில் நடித்த அஜித் உள்பட படக்குழுவினர்கள் அனைவருக்கும் அவர் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'விவேகம்' படத்தை மகள் அக்சராஹாசனுடன் பார்த்து கொண்டிருக்கின்றேன். நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு.அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என்று கமல் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித்முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) August 24, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments