இப்ப வரைக்கும் வரவில்லை: இனிமே வர வச்சிடாதிங்க: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசனின் சமீபத்திய விஸ்வரூப எழுச்சி, அவர் அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் 'அரசியலுக்கு இன்று வரை நான் வரவில்லை, ஆனால் வரவழைத்துவிட வேண்டாம்' என்று தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
மேலும் அவர் இதுகுறித்து கருத்து கூறுகையில் 'ஒரு கட்சி ஆரம்பிக்க எவ்வளவு பணம் வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அது என்னால் சாத்தியமா? ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் நேர்மையாக வெள்ளை பணத்தை கொண்டே அரசியல் கட்சி ஆரம்பித்து விடலாம் என்ற சூழ்நிலை உள்ளது. அதற்காக நான் வருவேனா? என்று கேட்க வேண்டாம்.
என்னை பொருத்தவரையில் 'எஞ்சினியர் படித்தவர் பொதுப்பணித்துறை அமைச்சராக வேண்டும், சட்டம் முழுவதும் படித்த தமிழர் சட்ட அமைச்சராக வேண்டும், என்பதுதான். அந்தந்த துறைகளை பற்றி முழுவதும் தெரிந்தவர்கள் அந்த துறைக்கு அமைச்சர் ஆனால் அந்த துறையும் நல்ல வளர்ச்சி அடையும் நாடும் வளர்ச்சி அடையும். நான் பிலிம் இன்ஸ்டிடியூட் தொடங்கினால் எப்படி இருக்குமோ அப்படி நாடு இருக்கும் என்று கூறினார். மேலும் இனிமேல் நாம் தேடவேண்டியது நல்ல தலைவர்களை, நல்ல நிர்வாகிகளை மட்டுமே என்பது என்னுடைய கருத்து என்று கமல் அந்த பேட்டியில் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments