வசூல்ராஜா ஸ்டைலில் புற்றுநோயால் அவதிப்படும் ரசிகருக்கு நம்பிக்கை ஊட்டிய நடிகர் கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கனடாவில் இருக்கும் சாகேத் என்பவர் மூளை புற்றுநோயால் அவதிப்படுவதாகவும் அவர் தனது தீவிர ரசிகர் என்பதையும் தெரிந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் சாகேத்துடன் நேரடியாக ஜும் காலில் பேசி உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார்.
கனடாவாழ் தமிழரான சாகேத் தீவிர மூளை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். நடிகர் கமலின் தீவிர ரசிகரான இவர் அவருடன் பேச விரும்பி இருக்கிறார். இந்த ஆசையைத் தெரிந்து கொண்ட நடிகர் கமல் ஜும் காலில் சாகேத்துடன் உரையாடி இருக்கிறார். அதோடு தனது குடும்பத்தை நடிகர் கமலுக்கு அறிமுகப்படுத்தி வைத்த சாகேத், “விருமாண்டி“ படத்தின் நினைவாக தனது ஒரு மகனுக்கு விருமாண்டி என்றே பெயர் வைத்து இருப்பதையும் தெரிவித்து உள்ளார்.
மேலும் சென்னைக்கு வந்து தங்களை பார்க்கலாமா என கேட்ட சாகேத்திடம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கலாம் என நடிகர் கமல் கூறி அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
“வசூல்ராஜா எம்பிபிஎஸ்“ திரைப்படத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கடைசி வரை நம்பிக்கை ஊட்டும் விதமாக நடிகர் கமல்ஹாசன் நடித்து இருப்பார். தற்போது அதைப் போலவே நிஜத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நேரடியாக வீடியோ காலில் பேசி அவரை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்து இருக்கிறார். இதனால் நடிகர் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments