கமல்ஹாசனின் 'வெற்றி விழா'வுக்கு கிடைத்த வெற்றி வசூல்

  • IndiaGlitz, [Monday,August 07 2017]

சூப்பர் ஹிட் ஆன பழைய படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீரிலீஸ் செய்யும் வழக்கம் தமிழ்த்திரையுலகில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. சிவாஜி கணேசனின் 'கர்ணன்' முதல் ரஜினியின் பாட்ஷா வரை பல படங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு ரிலீசாகி நல்ல வசூலை கொடுத்துள்ளது.

இந்த வகையில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வெற்றி விழா'. இந்த படம் கடந்த வெள்ளியன்று டிஜிட்டலில் ரிலீஸ் ஆகி புதிய ரிலீஸ் படங்களுக்கு இணையான வசூலை கொடுத்துள்ளது.

இந்த படம் சென்னையில் 12 திரையரங்குகளில் 42 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,20,189 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் ரீரிலீஸ் படங்களில் நல்ல ஓப்பனிங் வசூலை கொடுத்த படங்களில் 'வெற்றி விழாவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'பாகுபலி 2', பைரவாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'விக்ரம் வேதா'

இந்த ஆண்டில் முதல் மூன்று வாரத்தில் அதிக வசூல் செய்த படங்களாக எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' முதல் இடத்திலும் தளபதி விஜய்யின் 'பைரவா' படம் இரண்டாவது இடத்திலும் உள்ளது...

ஹிப் ஹாப் ஆதியின் 'மீசையை முறுக்கு' செய்த சாதனை

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷை அடுத்து ஹீரோவாக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் புதியதாக இணைந்துள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி...

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் இணையும் கமல்-மோகன்லால்

கமல்ஹாசன் - மோகன்லால் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'உன்னை போல் ஒருவன்'.

இன்று வெளியேறுகிறாரா ஜூலி? கசிந்த புகைப்படத்தால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய இறுதிக்காட்சியில் நாளை எவிக்சன் இருக்கின்றது என்று கமல்ஹாசன் கூறினார்.

வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து.

இந்தியாவின் அடுத்த துணை குடியரசு தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. அனைத்து எம்பிக்களும் ஓட்டு போட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலையே எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.