கமல்ஹாசனின் 'வெற்றி விழா'வுக்கு கிடைத்த வெற்றி வசூல்

  • IndiaGlitz, [Monday,August 07 2017]

சூப்பர் ஹிட் ஆன பழைய படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீரிலீஸ் செய்யும் வழக்கம் தமிழ்த்திரையுலகில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. சிவாஜி கணேசனின் 'கர்ணன்' முதல் ரஜினியின் பாட்ஷா வரை பல படங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு ரிலீசாகி நல்ல வசூலை கொடுத்துள்ளது.

இந்த வகையில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வெற்றி விழா'. இந்த படம் கடந்த வெள்ளியன்று டிஜிட்டலில் ரிலீஸ் ஆகி புதிய ரிலீஸ் படங்களுக்கு இணையான வசூலை கொடுத்துள்ளது.

இந்த படம் சென்னையில் 12 திரையரங்குகளில் 42 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,20,189 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் ரீரிலீஸ் படங்களில் நல்ல ஓப்பனிங் வசூலை கொடுத்த படங்களில் 'வெற்றி விழாவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.