முடியாவிட்டால் விலகி கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் ஆலோசனை

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை தனது டுவிட்டர் மூலமும் பேட்டியின் மூலமும் கூறி வருகிறார். இதற்கு ஆட்சியாளர்கள் மட்டுமின்றி பிற கட்சியினர்களும் 'ஆதாரம் இல்லாமல் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற கூடாது என்று கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊழல் குறித்த ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள் என்று கமல் தனது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் கூறினார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் டெங்கு காயச்சல் பரவி வருவதாகவும் இந்த நோய் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கையை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு தனது சமூக வலைத்தளத்தில் கமல் இதுகுறித்து கூறியதாவது: பள்ளிப் படிப்பை கூட முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. ஆனால் டெங்கு காய்ச்சல் என்றால் என்ன என்று எனக்கு புரியும். டெங்குவால் என் மகள் இறப்பின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த முடியாவிட்டால் விலகிக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.