கமல்ஹாசனின் டுவிட்டுகளுக்கு அர்த்தம் என்ன?
- IndiaGlitz, [Friday,August 11 2017]
கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் ஆக்கபூர்வமான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட பின்னர் தனது டுவிட்டரில் இரண்டு பதிவுகளை தெரிவித்துள்ளார்.
"விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின் தள்ளாதே. களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்" .
விம்மாமல் பம்மாமல் விவசாயக் செய். நல்ல விதைகளை விதைத்திடு, உழும்போது பின்பக்கம் பார்க்காதே. பயிர்களின் நடுவே வளரும் செடிகளை களையெடுக்க தாமதிக்காதே. கூடி நடவு செய்தால் வெல்வது நானில்லை நாம். இந்த டுவிட்டுக்கு இதுதான் அர்த்தம் என்று மேலோட்டமாக கூறப்பட்டாலும் இதில் விவசாயத்திற்கு பதிலாக அரசியலை சேர்த்தால் இதன் அர்த்தம் வேறு மாதிரியாக இருக்கும், யாருக்கோ மறைமுகமாக கமல் அரசியல் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது அவர் யாரை மனதில் வைத்து கூறினார் என்பது அந்த ஆண்டவருக்கு மட்டும்தான் தெரியும்.
கமல் தனது அடுத்த டுவிட்டில் 'பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு .தேசியமும் தான்' என்று கூறியுள்ளார். இந்த டுவீட் அனைவருக்கும் புரியும் என்பதால் விளக்கம் தேவை இல்லை என்று நம்பப்படுகிறது.
விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2017
களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்
பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2017