சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கமல் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆதார் அட்டை குறித்த வழக்கு ஒன்றின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த தீர்ப்புக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று கூறி வரும் மத்திய மாநில அரசுகள் தனிமனித ரகசியத்தை கருத்தில் கொள்ளாமல் ஆதார் விபரங்களை கசியவிடும் அளவிற்கு ஆதார் விபரங்களின் பாதுகாப்பு கேள்விகுரியாக இருந்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அளித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, 'தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுப்ரின் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 'சுப்ரிம் கோர்ட் தனிமனித உரிமையை நிலைநிறுத்தி இருக்கிறது. இது பற்றி சந்தேகம் எதுவும் இல்லை. மதிப்பிற்குரிய நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி கூறவேண்டும். இது இந்தியாவை உருவாக்கும் தருணங்களுள் ஒன்றாகும்' என்று கூறியுள்ளார்.
SC upholds the right to privacy Nothing vague or amorphous about it. People thank the Honourable Judges. These are moments that make India.
— Kamal Haasan (@ikamalhaasan) August 24, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments