நான் எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன்… வரலாற்று சேதி சொல்லும் கமல்ஹாசனின் அதிரடி டிவிட்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி அரசியல் பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிட இருக்கிறார். இதற்கான தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் தற்போது ஒரு பரபரப்பு டிவிட்டை போட்டு இருக்கிறார். அந்த டிவிட் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவுப் படுத்தும் விதமாக இருக்கிறது எனக் கூறினாலும் அது யாருக்கோ சேதி சொல்லும் விதமாகவும் அமைந்து இருக்கிறது.
தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கும் கமல்ஹாசன் அதில் ஒரு கருத்தையும் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் கமல்ஹாசனுக்கு முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர் மாலை அணிவிப்பது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. மேலும் அந்த பதிவில் “புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல. தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல. என்னென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே நான் அவர் மடியில் வளர்ந்தவன் நினைவிருக்கட்டும்… எதுவும் தடையல்ல” எனப் பதிவிட்டு இருக்கிறார். இந்தப் பதிவு அவரது தொண்டர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் மதுரையில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், தமிழகத்தை சீரமைப்போம் என்ற வார்த்தையுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதையடுத்து நேற்று தூத்துக்குடி, இன்று தேனி எனப் பரவலாக இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்க முடியாது என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து பேசிய கமல்ஹாசன் டார்ச் லைட் இல்லையென்றால் கவலையில்லை. கலங்கரை விளக்கமாக இருந்து மக்களுக்கு சேவையாற்றுவோம். சாதாரண உருவத்தை கொண்டு விஸ்வரூபமாக மாற்றும் சக்தி நமக்கு உள்ளது. ஜனநாயகத்தின் எதிரிகளோடுதான் நமக்கு போட்டி, எதிர் சித்தாந்தம் உள்ளவர்களுக்கு பதிலடி கொடுப்போம் என அதிரடி கருத்து வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.
எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல pic.twitter.com/Tvp0x7d8tc
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments