எப்போ இயக்குநர் தொப்பியை போடுவீங்க? உலகநாயகனின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் எழுப்பிய கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்துவரும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பை தவிர இயக்குநர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக அடையாளங்களை கொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் வித்தியாசமான கேள்விகளை அவரிடம் எழுப்பி வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக 6 வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, போஜ்பூரி என்று பல மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன் வாழும் காலத்திலேயே சாதனையாளராகத் திகழ்ந்து வருகிறார். அவருடைய சினிமா திறமைக்காக இதுவரை பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், 4 முறை தேசிய விருதுகள் என்று அடுக்கடுக்காக பல விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் அவர் திரைத்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டி ‘வாழ்நாள் சாதனையாளர் விருது‘ வழங்கி கவுரவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சமீபகாலகமாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் தலையில் தொப்பியைப் போட்டுக்கொண்டு கையில் கேமிராவுடன் இருக்கும் நடிகர் கமலை பார்த்த ரசிகர்கள் மீண்டும் எப்போது இயக்குர் தொப்பியைப் போட போறீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் கமல் ‘சாச்சி‘, ‘ஹே ராம்‘, ‘விருமாண்டி‘, ‘விஸ்வரூபம்‘, ‘விஸ்வரூபம் 2’ என்று பல திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது ரசிகர்கள் எழுப்பும் கேள்வி சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments