ரஜினி, அஜித், விஜய் செய்யாததை 'விக்ரம்' படத்திற்காக செய்யும் கமல்ஹாசன்!

தமிழ் திரை உலகை பொறுத்தவரை மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்பட படக்குழுவினர் முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்குக்கு வந்து ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்க்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இருப்பினும் ரஜினி, அஜித்,விஜய் போன்ற நடிகர்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பது இல்லை என்பது தெரிந்ததே. ஆனால் விஜய் மட்டும் மாறுவேடத்தில் வந்து படம் பார்ப்பதாக ஒரு சிலர் கூறுவதுண்டு.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கில் கமல்ஹாசன் அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அன்றைய தினம் 4 மணிக்கு காட்சியை ரோகிணியில் பார்க்கும் ரசிகர்கள் கமல்ஹாசனை நேரில் சந்திக்க வாய்ப்புள்ளது.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஷ் உத்தமன், காயத்ரி ஷங்கர், ஷிவானி நாராயணன், ஷான்வி ஸ்ரீவத்சவா, ஜி மாரிமுத்து, ரமேஷ்திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'சூர்யா 41' படத்தின் டைட்டில் இந்த இரண்டில் ஒன்று தான்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 41' என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே முடிந்தது என்பதை பார்த்தோம்.

அரவிந்தசாமி அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: சென்சார் தகவல் இதோ!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகை பூர்ணா: மாப்பிள்ளை யார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வரும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையிலும் மற்றொரு தமிழ் நடிகை பூர்ணா தனது திருமண அறிவிப்பை

நயன்தாராவுக்காக இதை செய்வார்களா விஜய் அஜித்? 

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரும் ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய இருக்கிறார் என்பதும், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த திருமணம் நடைபெற

அஜித், விஜய் படங்களில் பாடிய பிரபல பாடகர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் இசை ரசிகர்கள்

அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடிய பாடகர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த தகவல் இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.