'இந்தியன் 2'வுக்கு பதிலாக 'தேவர் மகன் 2': கமல்ஹாசனின் மெகா திட்டம்

  • IndiaGlitz, [Friday,May 10 2019]

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முதல்கட்ட படப்ப்பிடிப்புடன் நின்றுவிட்டது. இந்த படத்தை லைகா நிறுவனம் கைவிட்டதாகவும், அதற்கு பதிலாக ரிலையன்ஸ் அல்லது சன்பிக்சர்ஸ் தயாரிக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் கடந்த சில மாதங்களாக பிசியாக இருந்த கமல்ஹாசன் இனி அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை சினிமாவில் பிசியாக இருக்க முடிவு செய்துவிட்டாராம். முதல்கட்டமாக பிக்பாஸ் 3' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், அதன்பின்னர் 'இந்தியன் 2' படத்திற்கு பதிலாக 'தேவர் மகன் 2' படத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 'தேவர் மகன் 2' படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன், தற்போது இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியை பொள்ளாச்சியில் தொடங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தை கமல்ஹாசனே தயாரித்து இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் முன்னணி இளம்நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
 

More News

சின்மயி கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை காவல்துறை!

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை உச்சநீதிமன்றம் உரிய முறையில் விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி பின்னணி பாடகி சின்மயி

என் படத்தையும் பாருங்க! தியேட்டர் வாசலில் கெஞ்சிய தயாரிப்பாளர்

ஒவ்வொரு வெள்ளியன்றும் நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியானபோதிலும், டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டும் பார்த்துவிட்டு

'பிக்பாஸ்3'யில் நான் இல்லை: பிரபல நகைச்சுவை நடிகர் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பப்படவுள்ளது.

என் பாடல்களில் ஆபாசமா? புஷ்பவனம் குப்புசாமிக்கு செந்தில் பதிலடி!

ஒரே துறையில் பிரபலமாக இருப்பவர்களிடையே போட்டியும் பொறாமையும் ஏற்படுவது உலகம் முழுவதும் உள்ள ஒரு வழக்கமான நிலை ஆகும்.

விஷால்-அனிஷா திருமண தேதி!

விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது