close
Choose your channels

30 வருடங்களுக்கு பின் இணையும் கமல்ஹாசன் - சாருஹாசன் சகோதரர்கள்

Sunday, November 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம்' படத்திற்கு பின்னர் 30 வருடங்கள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் அவருடைய சகோதர் சாருஹாசன் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர்.
அறிமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் தாதா வேடத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் சாருஹாசனுக்காக ஒரு பாடலை கமல்ஹாசன் பாடவுள்ளார். இந்த தகவலை இயக்குனர் விஜய்ஸ்ரீ உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தில் பழம்பெரும் காமெடி நடிகர் ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஒன்பது வருடங்களுக்கு பின்னர் அவர் இந்த படத்தில் நடிப்பதாகவும், இந்த படத்தில் அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரராகவும், நாயகியின் தந்தையாகவும் நடிப்பதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment