60 வருட சினிமா அனுபவம்… உலகநாயகன் கமல்ஹாசனுக்கு விருது வழங்க இருக்கும் IIFA!
Send us your feedback to audioarticles@vaarta.com
6 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி இன்றைக்கு உலகப் பிரபலமாக இருந்துவரும் உலகநாயகன் கமல்ஹாசனை கவுரவிக்கும் விதமாக சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் உயரிய விருது வழங்கப்பட இருக்கிறது.
IIFA எனப்படும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவானது அபுதாபியில் வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் திரைத்துறைக்கு நடிகர் கமல்ஹாசன் ஆற்றிய சேவையை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது‘ வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் திரைக்கதை, இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என்று பன்முக திறமைகளோடு இயங்கிவரும் இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் பிரான்ஸ் நாட்டில் வழக்கப்படும் செவாலியர் விருது எனப் பல விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் அபுதாயில் யாஸ் தீவில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெறவுள்ள நிலையில் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தனது 6 வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக குடியரசு தலைவரிடம் குழந்தை நட்சத்திரத்திற்கான தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ‘நாயகன்’, ‘அன்பே சிவம்’, ‘ஹேராம்’, ‘தசாவதாரம்‘, ‘இந்தியன்‘, ‘பஞ்சதத்திரம்’ சமீபத்தில் ‘விக்ரம்’ என்று பல வெற்றிப்படங்களைத் தந்துள்ளார்.
தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி எனப் பல மொழிகளிலும் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்நிலையில் அவருடைய 60 வருட சினிமா அனுபவத்தைப் பாராட்டி கவுரவிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்தத் தகவலை அடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments