கமல்ஹாசனிடம் பேசியது என்ன? முக ஸ்டாலின் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் திமுக, இன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து கமல்ஹாசன் அவர்களுடன் விவாதித்ததாக பேட்டி ஒன்றில் திமுக் தலைவர் முக ஸ்டாலின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து கமல்ஹாசன் தன்னிடம் பேசியதாகவும், அவருடன் குடியுரிமை சட்டம் குறித்து விவாதித்ததாகவும் கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அடுத்தடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் மக்கள் நீதி மையம் போன்ற ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளும் கலந்து கொள்ளும் என்றும் அவர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்
ஏற்கனவே குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுகவும் மக்கள்நீதிமய்யம் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஒருமித்த கருத்து கொண்ட திமுகவும் மக்கள்நீதிமய்யம் கட்சியும் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com