சமண முனிவருக்கு ஈடானவர் பாரதிராஜா: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Saturday,April 15 2017]
பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் 'கூத்துப்பட்டறை'க்கு பின்னர் பாரதிராஜா தற்போது சினிமாவுக்கு என ஒரு தனி பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். 'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற இந்த சினிமா பயிற்சி மையத்தின் தொடக்கவிழா நேற்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், கார்த்தி, நாசர், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகைகள் ராதா, சுகன்யா, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட பலர் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியபோது, ''கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் பாரதிராஜா, சமண முனிவருக்கு ஈடானவர். பல தடைகளைத் தாண்டி கலைஞனை உருவாக்கத் தெரிந்தவர் பாரதிராஜா. சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஜனநாயகக் கலை' என்று கூறினார்.
மேலும் இதே விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பேசும்போது, 'மண்ணுக்கு பெருமை சேர்க்கும் படங்களை பாரதிராஜாவின் பயிற்சிப் பட்டறை உருவாக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.
இறுதியில் பேசிய பாரதிராஜா, ''திரைத்துறை என் வாழ்க்கையை முழுமை ஆக்கியது. வேறு துறையில் இருந்திருந்தால் இந்த அளவிற்கு சாதித்திருப்பேனா என்று தெரியாது' என்று கூறினார்.