பிரதமர், முதல்வரிடம் பேசியுள்ளேன். பொறுமை காக்கவும். கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்து வரும் நிலையில் அவ்வப்போது தமது ஆதரவை போராட்டக்காரர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்ததோடு, போராட்டம் அறவழியில் சென்று கொண்டிருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே.

அதேநேரம் இந்த போராட்டம் வன்முறையாக மாறியபோது பதறியடித்து அமைதியாக இருங்கள் என்று அறிவுரையும் கூறினார். மேலும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து இந்திய பிரதமரிடமும், தமிழக முதல்வரிடமும் தான் பேசியுள்ளதாகவும் இதுகுறித்து நல்ல பதில் விரைவில் வரும் என்றும் எனவே மாணவர்கள் அமைதியாக பொறுமையாக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, மாநில அரசு உங்களை திருப்திபடுத்த தயாராகவுள்ளதாகவும், இந்த விஷயத்தில் பொறுமை மிக அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்,.

மேலும் தமிழகத்தின் பிற பகுதியிலும் மெரீனாவிலும் அமைதியான வழியில் போராடிய போராட்டக்காரகள் மீது எந்தவிதமான தாக்குதல் நடவடிக்கையையும் போலீசார் எடுக்க அனுமதிக்க கூடாது என்று காவல்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்ட கமல், விரைவில் முதல்வர் இதற்கான நல்ல முடிவை சட்டமன்றத்தில் அறிவிப்பார் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

More News

போராட்டத்தை கைவிடுவது எப்போது? லாரன்ஸ் முன்னிலையில் மாணவர்கள் தகவல்

சென்னை மெரீனாவில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தாலும், ஒருசில மாணவர்கள் கடல் அருகே சென்று போராட்டம் செய்து வருகின்றனர்

போராட்டம் முடிந்தது. தயவுசெய்து வீட்டுக்கு செல்லுங்கள். மாணவர்களுக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்

கடந்த ஒரு வாரமாக அமைதியாக நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டம் துரதிஷ்டவசமாக வன்முறையாக மாறிவிட்டது...

இது வீரத்தை காட்டும் நேரம் அல்ல. மாணவர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

கடந்த ஒரு வாரமாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி தனது வீட்டின் முன் இரவுபகல் பாராது அமைதியாக சிம்பு போராடினார் என்பதும் அனைவரும் அறிந்ததே...

இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய நாள். புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே. ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

கடந்த ஒரு வாரமாக அறவழியில், அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வன்முறை பக்கம் திரும்பிவிட்டது. மாணவர்கள் என்ற போர்வையில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் நுழைந்ததே இந்த வன்முறைக்கு காரணம் என போலீசார் உள்பட பொதுமக்கள் பலர் கூறி வருகின்றனர்...

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் தீவைப்பு. காரணம் யார்?

சென்னையில் மாணவர்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீஸார் நிறுத்தி வரும் நிலையில் ஒருசில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது...