தமிழன் தலையில் கோமாளிக்குல்லா! கமல்ஹாசனின் டுவீட் எதை குறிக்கின்றது
- IndiaGlitz, [Monday,August 21 2017]
அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருந்த ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் இன்று அதிகாரபூர்வமாக இணையவுள்ளன. இதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இன்னும் ஒருசில நிமிடங்களில் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா. என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் கமல்ஹாசன் எதை குறிப்பிட்டு சொல்கிறார் என்று வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், அதிமுக அணிகள் இணையும் இந்த நேரத்தில் கமல் செய்த பதிவு இதுகுறித்தாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.
— Kamal Haasan (@ikamalhaasan) August 21, 2017