வேலூர் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் அவருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பலகோடி ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வேலூரில் சிமெண்ட் குடோன் ஒன்றில் வார்டு நம்பர் போட்டு, கட்டுக்கட்டாக பணம் பதுக்கப்பட்டிருந்ததையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். எனவே பணப்பட்டுவாடா முறைகேடு நடப்பதால் வேலூரில் தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், 'ஓட்டுக்கு எனது கட்சியினர் பணம் கொடுத்தாலும் நான் அதை காட்டிக் கொடுத்து விடுவேன். பணம் கொடுத்து வாக்கு கேட்பது அவமானம். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறினார்.
அதிமுக உள்பட எந்த ஒரு அரசியல் கட்சியும் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பாத நிலையில் கமல்ஹாசன் மட்டும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதா? ரத்து செய்வதா? என்ற முடிவை தேர்தல் ஆணையம் விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout