ஸ்ருதிஹாசன் என்னை விட மேல். கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே பணிவானவர்தான். ஆனால் அவர் வீட்டில் இருந்து வந்துள்ள விக்ரம்பிரபு அவரைவிட பணிவானவர் என்று கமல் சமீபத்தில் 'வாஹா' ஆடியோ விழாவில் பேசினார்.
கமலின் இந்த பேச்சை சிலர் தவறாக புரிந்து கொண்டு மகள் ஸ்ருதிக்கு கமல் மறைமுகமாக அறிவுரை கூறியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கமல் கூறியதாவது, ' அந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான கருத்தை தெரிவிக்கவே நான் அவ்வாறு கூறினேன். ஸ்ருதிக்கு நான் மறைமுகமாக அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. நானும் சரி, ஸ்ருதியும் சரி புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள திறந்த மனதுடனே இருப்போம். ஸ்ருதி வயதில் நான் பணிவாக இருந்ததைவிட அவர் பணிவாகத்தான் இருக்கின்றார் என்று விளக்கம் அளித்தார்.
கமலின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் 'அனைத்து விஷயங்களையும் உங்களிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். என்னை பொறுத்த வரையில் நீங்கள்தான் மிக மிக சிறந்தவர்' என்று ஸ்ருதிஹாசன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
Shruti and I will always be open to learn good things from others. I learn certain things from Shruti. She's more humble than I at her age
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2016
Words are interpreted to suite agendas. My praise for our boy Vikramprabhu's humility need not be taken as my euphemistic advice to Shruti.
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2016
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com