ஜல்லிக்கட்டு தடை குறித்து கமல்ஹாசன் கருத்து

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக 'ஜல்லிக்கட்டு' நடத்தி வருவது தமிழர்களின் கலாச்சாரமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிச்சயம் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தீவிரமாக குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது திரையுலகினர்களும் ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாக ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு காட்சிகளை தனது படங்களில் வைத்து பெருமைப்படுத்திய உலக நாயகன் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு குறித்து கூறியதாவது:
ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது என்றும் ஏறுதழுவதல் என்பதிலிருந்து உருவானது தான் ஜல்லிக்கட்டு என்றும் தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை போட்டியாகத்தான் கருதவேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் மாடுகளை வெட்டி தயாரிக்கப்படும் பிரியாணிக்கே தடை இல்லாதபோது ஜல்லிக்கட்டை ஏன் தடை செய்ய வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.