ஜல்லிக்கட்டு தடை குறித்து கமல்ஹாசன் கருத்து

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக 'ஜல்லிக்கட்டு' நடத்தி வருவது தமிழர்களின் கலாச்சாரமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிச்சயம் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தீவிரமாக குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது திரையுலகினர்களும் ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாக ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு காட்சிகளை தனது படங்களில் வைத்து பெருமைப்படுத்திய உலக நாயகன் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு குறித்து கூறியதாவது:
ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது என்றும் ஏறுதழுவதல் என்பதிலிருந்து உருவானது தான் ஜல்லிக்கட்டு என்றும் தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை போட்டியாகத்தான் கருதவேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் மாடுகளை வெட்டி தயாரிக்கப்படும் பிரியாணிக்கே தடை இல்லாதபோது ஜல்லிக்கட்டை ஏன் தடை செய்ய வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி அதிமுக உறுப்பினர் ஜோசப் தொடர்ந்த வழக்கின் விசாரணை சற்று முன் நடந்தது.

ரஜினியின் ஆசி, ஆஸ்கார் விருதைவிட மேல். ஆர்.கே.சுரேஷ்

சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸில் முந்திய படம் எது?

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்களை பார்த்து வருகிறோம். அந்தவகையில் கடந்த வார நிலை குறித்து தற்போது பார்ப்போம்

விக்ரம்-கவுதம்மேனனின் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் பற்றிய அறிவிப்பு

கவும்தம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் தகவல்கள் நாள்தோறும் மாலை 6 மணிக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றது.

உலக அளவில் 'பைரவா' செய்த மிகப்பெரிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.