'விஸ்வரூபம் 2' படத்துக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்பட்ட தடை நாடு அறிந்தது. ஒருசில மத அமைப்புகளும், அன்றைய தமிழக அரசும் மாறி மாறி தடை போட்டது. பின்னர் நீதிமன்றம் வரை சென்று அந்த படத்தை கமல் ரிலீஸ் செய்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட சிக்கல், மற்றும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கமல் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது:

"எனது 'விஸ்வரூபம்' படத்திற்குத் தடை விதிக்கப்பட்டபோது சட்டப் போராட்டத்தின் வாயிலாகத் தடையை நீக்கப்பெற்றோம். ஆனாலும், அப்போது ஆட்சியிலிருந்த அரசு படத்தை மீண்டும் தடை செய்தது. மக்கள் ஆதரவு பெருகிய பின்னரே படத்தின் மீதான தடையை அவர்கள் நீக்கினர். எனது நிதிநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவர்கள் திட்டமும் அதுவே.

எனது சொத்துகள் அனைத்தையும் அடகு வைத்தேன். நான் பணிவானவன் என்றே அறியப்பட விரும்பினேன். ஆனால், அவமானத்துக்குள்ளானேன். கிட்டத்தட்ட நொறுக்கப்பட்டேன். அம்னீஸியா என்ற மறதி நோய் நமது தேசத்தில் புரையோடிக் கிடக்கிறது.

ஊழலில் திளைத்திருக்கும் ஒரு தேசத்தில் எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் எளிதாக மறக்கப்படும். எப்போதுமே வரி ஏய்ப்பு செய்திராத நான் ரூ.60 கோடி இழந்தேன். மக்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களே என்னை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். 'விஸ்வரூபம் 2'ம் பாகத்துக்குச் சிக்கல்கள் வராது என நான் நம்புகிறேன். இருந்தாலும்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா?' என்று கூறியுள்ளார்.

More News

புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா. நடிகர் சங்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை

சமீபத்தில் கூடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் நடிகர் சங்கத்திற்கு என புதிய்தாக கட்டப்பட்டும் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

IIFA விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய நான்கு தென்னிந்திய மொழி படங்களுக்கு வழங்கப்படும் IIFA என்று கூறப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நேற்றும் இன்றும் ஐதராபாத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது...

கமல் ஒரு அகங்காரம் பிடித்த முட்டாள், ரஜினி ஒரு கோழை: சுப்பிரமணியன் சுவாமி

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாக தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்

மீண்டும் எழுச்சி பெறும் தமிழ் இளைஞர்கள்.

தமிழக மக்களின் கோரிக்கைகளுக்காக இனிமேல் அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை, மக்களே களத்தில் இறங்கினால்தான் காரியம் நடக்கும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி சென்னை மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டம். உலகப்புகழ் பெற்ற தமிழ் இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது

சென்னை மெரீனாவில் கடலில் இறங்கிய மாணவர்கள். பதட்டத்தில் போலீசார்

விவசாயிகள் மற்றும் நெடுவாசல் பிரச்சனைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் சென்னை மெரீனாவில் மாணவர்கள் போராட தொடங்கியுள்ளனர்.