கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' மீண்டும் தொடங்குவது எப்போது?

  • IndiaGlitz, [Sunday,November 27 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த மே மாதம் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தை தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என்ற மூன்று மொழிகளில் தொடங்கினார். இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ்குமார் திடீரென உடல்நலம் குன்றியதை அடுத்து இயக்குனர் பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்ட நிலையில் திடீரென கமல்ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனது. தற்போது அவர் முழுமையாக குணமடைந்து 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி உள்ளார்.
'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 முதல் விசாகப்பட்டிணத்தில் தொடங்கும் என்றும் அதனை அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
முதல்முறையாக கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்பட பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

More News

உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரனும், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், பிரபல நடிகர், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

சூர்யா-விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

'திருப்பாச்சி' அஜித்துக்காக எழுதப்பட்ட கதையா? பேரரசு வெளியிடும் ரகசியம்

இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'திருப்பாச்சி'. இயக்குனர் பேரரசுவின் முதல்படமான இந்த படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டதாகவும், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருந்ததால் அவர் நடித்ததாகவும், இயக்குனர் பேரரசு பிரபல வார இதழ் ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரவிந்தசாமி-த்ரிஷாவின் சதுரங்கவேட்டை-2 படத்தில் திடீர் மாற்றம்?

'தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி சமீபத்தில் 'சதுரங்க வேட்டை 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நாளை மதியம் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.