பிறந்த நாள் விழா குறித்து கமல் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Monday,October 24 2016]

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ஆம் தேதி அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் கமல்ஹாசன் சமூக நல சேவைகளுக்கு பின்னர் சிறப்புரை ஆற்றுவதும் வழக்கம்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த ஆண்டு தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை தனது ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தில் கூறியதாவது: நற்பணி இயக்கத் தோழர்களுக்கு ஒரு கோரரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய்த் தவிர்க்க வேணடுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

More News

விஜய், சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் கீர்த்திசுரேஷ்?

சிவகார்த்திகேயனுடன் 'ரஜினிமுருகன்', 'ரெமோ' என இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது இளையதளபதி விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார்.

நற்பணி மன்ற உறுப்பினர் மரணம். கமல் இரங்கல்

உலக நாயகன் கமல்ஹாசனின் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று காலை மரணம் அடைந்தார்...

குருதிப்புனல்-நாயகன் மலரும் நினைவு குறித்து கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' கடந்த 1987ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியும், 'குருதிப்புனல்'...

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ

நடிகர் தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. மேலும் அவர் கவுதம் மேனன் இயக்கத்தில்...

'பின்னிட்டேப்பா'. விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபலம் யார் தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் புதுப்புது ஸ்டில்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது...