இந்து மக்கள் கட்சிக்கு கமலின் சாட்டையடி பதில்
- IndiaGlitz, [Wednesday,July 12 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிகிறது என்ற குற்றச்சாட்டை கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.
இந்த புகார் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரைகுறை ஆடி அணிந்த பங்கேற்பாளர்களால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து கமல் கூறியபோது, 'இந்த சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அற்பமானது. கிரிக்கெட் போட்டிகளின் போது பவுண்டரி அடிக்கும் போதும், சிக்ஸர் அடிக்கும்போது குறைந்த ஆடை அணிந்த பெண்கள் நடனமாடுவதை கலாச்சார சீரழிவு என்று நாம் நினைப்பதில்லை. அந்த நடனத்தை மகிழ்ச்சியாக ரசிக்கின்றோம்
இந்துத்துவா குழுக்களால் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று தவறாக கணிக்கப்பட்டுள்ளேன். நான் ஒரு பகுத்தறிவாதி. கம்யூனிஸ்ட், இந்துத்துவா ஆகிய இரண்டு பக்கங்களில் இருக்கும் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு பகுத்தறிவாதி நான்
இந்த நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிவதாகவும், ஏழு கோடி தமிழர்களின் மனதை புண்படுத்தியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கமல், 'இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் பாடல்களையும், ஏன் அபிராமி பட்டாரின் பிரார்த்தனை பாடல்களையும் படித்து பார்த்தால் இந்த குற்றச்சாட்டு வந்திருக்காது. சைவ சித்தர்களில் ஒருவரான அபிராமி பட்டர் வேதங்களை யோனிக்கு சமமாக விவரிக்கின்றார். இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்கள். எனவே அவர்களது மிரட்டலால் எனக்கு பயம் இல்லை'
இவ்வாறு இந்து மக்கள் கட்சிக்கு கமல் தனது சாட்டையடி பதிலில் கூறியுள்ளார்.