சி.ஆர்.பி.எப் வீரரின் பொறுப்பான தியாகமும், கமல்ஹாசனின் ஆதரவும்

  • IndiaGlitz, [Friday,April 14 2017]

சமீபத்தில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது பாதுகாப்புக்கு சென்றிருந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் தேர்தல் முடிந்தவுடன் மின்னணு வாக்கு இயந்திரத்தை எடுத்து கொண்டு அலுவலகம் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் இருந்த பிரிவினைவாதிகள் சிலர் சி.ஆர்.பி.எப் வீரரை அவமானமாக பேசியதோடு அவரை தாக்கவும் செய்தனர். 'இந்தியாவுக்கு போ' என்று கூறியபடி அந்த வீரரை அவர்கள் தாக்கினர். இந்த தாக்குதலில் வீரரின் தொப்பி கழன்று ஓடியது. அவரது கையில் துப்பாக்கி இருப்பினும் அவர் அமைதியாக திரும்பி சென்றார். இந்த தாக்குதல் குறித்து பின்னர் கருத்து தெரிவித்த அந்த சி.ஆர்.பி.எப் வீரர், தன்னிடம் இருந்த மின்ன்ணு வாக்கு இயந்திரத்தை பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதில்தான் தனது கவனம் முழுவதும் இருந்ததாக தியாக மனப்பான்மையுடனும் பொறுப்புடனும் பதில் கூறினார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'எனது வீரரை தொட்டு தாக்கிய சம்பவம், தாக்கியவர்களுக்கு ஒரு அவமானம். மிகச்சிறந்த வீரம் என்பது அஹிம்சையே. இதற்கு அந்த சி.ஆர்.பி.எப் வீரரே சிறந்த உதாரணம்' என்று கூறியுள்ளார்.

More News

தமிழில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

தேசிய விருதில் பாகுபாடு என்பது எனது கருத்து மட்டுமல்ல. ஏ.ஆர்.முருகதாஸ்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக அமீர்கானின் 'டங்கல்' படத்திற்கு விருது கிடைக்காதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

விஜய்சேதுபதியின் 25வது படத்தின் டைட்டில் அறிவிப்பு

இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவரும் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை வெளியிட்டு வருபவருமான நடிகர் விஜய்சேதுபதி தற்போது 25வது படம் என்ற மைல்கல்லை தொட்டுவிட்டார். இவரது 25வது படத்திற்கு 'சீதக்காதி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது...

'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ

சமீபத்தில் வெளிவந்த இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் அனைத்து தரப்பினரின் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்தது...

கார்த்திக் தற்கொலை வழக்கு. மைனா நந்தினி கைது ஆவாரா?

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.