ராணி எலிசபெத்துடன் கைகுலுக்கிய கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா நேற்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்களில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஒருவர் என்பதை நேற்று பார்த்தோம்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் அவர்களுடன் கமல்ஹாசன் கைகுலுக்கி தனது வணக்கத்தை தெரிவித்தார். ராணி எலிசபெத் அவர்கள் அவருடைய வணக்கத்தை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.
ராணியுடன் கமல் கைகுலுக்கிய புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக இணையதளங்களிலும் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்களை கமல் ரசிகர்கள் மிக அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments