டெல்லியில் மத்திய அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனதுக்கு தோன்றிய, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை ஆத்திரமூட்டியுள்ளதால் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர் என்பது தெரிந்ததே.
மேலும் கடந்த சில நாட்களாகவே கமல்ஹாசனை பிரபல அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று டெல்லி சென்ற கமல்ஹாசன், அங்கு தமிழகத்தை சேர்ந்த ஒரே மத்திய அமைச்சரான பொன்.ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தித்தார்.
பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் டெல்லி அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தில், 'சற்றுமுன் மரியாதை நிமித்தமாக என்னை புதுடெல்லியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சந்தித்தார்' என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் எந்த கட்சியிலும் சேர விரும்பாதவர் என்பது அனைவரும் அறிந்திருந்தபோதிலும், இந்த சந்திப்பு முக்கியத்துவம் உள்ள சந்திப்பாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments