புத்துயிர் பெறுகிறதா மருதநாயகம்? லைகா நிறுவனருடன் கமல் சந்திப்பு

  • IndiaGlitz, [Sunday,December 11 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் பூரண உடல்நலம் பெற்றதை அடுத்து மீண்டும் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். இதற்கான பணிகளை கவனிக்க சமீபத்தில் அவர் பிரிட்டனுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் பிரபல தொழிலதிபரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படத்தை சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பவருமான லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் அவர்களை கமல் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'மருத நாயகம்' படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்னிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. முப்பது நிமிட படம் தயாரான நிலையில் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது.

கமல்ஹாசன், சத்யராஜ், விஷ்ணுவர்தன், நாசர், பசுபதி, அம்ரீஷ்புரி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் மீதிப்பகுதியை கமல் விரைவில் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா விருது'. தமிழக அமைச்சரவை தீர்மானம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அமைச்சரவை நேற்று முதன்முதலாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடியது

ரஜினி மகளின் முக்கிய கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மத்திய அரசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, சமீபத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தபோது

இளம்பெண்களின் கனவு நாயகன் 'ஆர்யா'வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவரும் இளம்பெண்களின் கனவு நாயகனுமான ஆர்யா, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த சட்டரீதியாக போராடுவேன். மன்சூர் அலிகான்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு சமீபத்தில் நடிகை கவுதமி கடிதம் எழுதியிருந்தார்.

திமுக தலைவரை சந்தித்த ரஜினிகாந்த்-வைரமுத்து

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரிடமும் நல்ல நட்புடன் உள்ள மிகச்சிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர்.