முதல்வரை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,August 31 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிரடி அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அமைச்சர்களின் ஊழல் முதல் முதலமைச்சர் வரை விமர்சனம் செய்த கமல்ஹாசன் நேற்று கோவையில் கோட்டையை நோக்கி பயணிப்போம் என்று ஆவேசமாக பேசினார். அவருடைய பேச்சில் இருந்து வெகுவிரைவில் அவர் நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென முதலமைச்சரை கமல்ஹாசன் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அவர் சந்திக்கவிருப்பது தமிழக முதலமைச்சரை அல்ல, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் செவாலியே விருது பெற்ற போது அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துகூட கூறாத நிலையில் கேரள முதலமைச்சர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறியதும், அதற்கு கமல்ஹாசன் அவருக்கு நன்றி தெரிவித்ததோடு 'நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கேரள முதல்வரை சந்தித்த பின்னர் கமல்ஹாசனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களே வெகு ஆர்வமாக உள்ளனர்.

More News

ஓட்டுனர் உரிமம் காணாமல் போய்விட்டால் விண்ணப்பிக்க எளிய வழி

நாளை முதல் ஓட்டுனர் உரிமம் ஒரிஜினலை கையில் வைத்து கொண்டுதான் வாகனங்களை ஓட்ட முடியும்.

அஜித்தின் விவேகம்: தமிழகம், இந்தியா, உலக வசூல் விபரம்

தல அஜித் நடித்த 'விவேகம்' ரிலீஸ் ஆகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளது. புளூவேலில் ஏன் சிக்க வேண்டும்? காவல்துறை ஆணையர் அறிவுரை

உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று புளுவேல் என்ற எமனிடம் சிக்கி அதிலிருந்து வெளியே வரவிடாமல் தவிக்கின்றனர். இதன் உச்சகட்டமாக பலர் உயிரையே மாய்த்து கொள்வதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது...

'விவேகம்' காஜல் அகர்வாலின் 'மோர்ஸ் கோட்' குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

கோலிவுட் திரையுலகின் பல திரைப்படங்கள் நாம் இதுவரை கேள்விப்படாத பல விஷயங்களை நமக்கு கற்று கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' சுனாமியையும், ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாவது அறிவு' போதிதர்மரையும், துப்பாக்கி திரைப்படம் ஸ்லீப்பர் செல்லையும் நமக்கு கற்று கொடுத்தது...

பள்ளி சீருடையில் ரத்தம்: ஆசிரியை கண்டித்ததால் மாணவி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்துவந்த 13 வயது சிறுமியை வகுப்பாசிரியை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...