close
Choose your channels

'விஸ்வரூபம் 2 படத்தில் கனெக்சன் ஆன 'எங்க வீட்டு பிள்ளை'

Tuesday, July 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' திரைப்படம் சூப்பர் ஹிட் படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் பாணியில் அதற்கு பின்னர் பல படங்கள் தமிழிலேயே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' படத்தில் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் கனெக்சன் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேற்று 'விஸ்வரூபம் 2' படத்தின் புரமோஷன் மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'விஸ்வரூபம்' படத்தில் அப்பாவியாக இருக்கும் ஒருவர் திடீரென வீரனாக மாறும் கேரக்டர், 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் தாக்கம் தான் என்று கூறியுள்ளார். எங்க வீட்டு பிள்ளை' படத்தில் ஒரு எம்ஜிஆர் அப்பாவியாகவும், ஒரு எம்ஜிஆர் வீரனாகவும் வருவார். இந்த இரண்டு கேரக்டர்களை ஒரே கேரக்டராக்கி உருவாகியதுதான் 'விஸ்வரூபம் படத்தின் நாயகன் கேரக்டர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment