கமல் ஒரு படிப்பறிவில்லாத முட்டாள். டுவிட்டரில் தொடரும் கமல்-சுவாமி போர்

  • IndiaGlitz, [Wednesday,February 22 2017]

ஜல்லிக்கட்டு போராடம் தொடங்கியது முதல் கமல்ஹாசனுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே டுவிட்டர் போர் தொடங்கி அந்த போர் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளால் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

சமீபத்தில் கமல்ஹாசனை சுப்பிரமணியன் சுவாமி முதுகெலும்பில்லாத முட்டாள் என்று விமர்சனம் செய்ய அதற்கு கமல்ஹாசன், ' நான் முரட்டுத்தனமாக பதில் அளிக்க மாட்டேன். என்னை விட அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம். எனக்கு சாப்பாட்டில் எலும்பு இருக்கனும், ஆனால் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் தான் பிடிக்கும் நன்றாக சாப்பிடுங்கள்' என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசனை வம்புக்கு இழுக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் 'கமல்ஹாசன் ஒரு பகட்டான முட்டாள். ஏனெனில் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என கூறிய கமல் நான் தமிழர்கள் அனைவரையும் பொறுக்கி என கூறியதாக வேண்டுமென்றே திரித்து கூறுகிறார் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி டுவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு பதில் கூறிய சுவாமி, 'கமல்ஹாசன் படிப்பறிவில்லாத ஆடம்பரமான முட்டாள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த விமர்சனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சூர்யா-செல்வராகவன் படத்தின் நாயகி குறித்த முக்கிய தகவல்

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கி முடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடியும் நிலையில் உள்ளது...

விவசாயி கேரக்டரில் நடிக்கும் பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் அமீர், தனது அடுத்தபடமான 'சந்தனத்தேவன்' படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக உள்ளார். இந்நிலையில் தனது உதவியாளர் கோபால் இயக்குனராக அறிமுகமாக உள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்...

தனுஷூடன் 4வது முறையாக இணையும் பிரபல இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் தற்போது நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என பிசியான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷ் தற்போது 'பவர்பாண்டி' என்ற படத்தை இயக்கி வருவதோடு, கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறனின் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார்...

மாநகரம் படக்குழுவினர்களுக்கு பிரபல எடிட்டர் பாராட்டு

இன்றைய இளையதலைமுறை அறிமுக இயக்குனர்கள் திரைத்துறையில் எண்ட்ரி ஆகும்போது தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதால் கோலிவுட் ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது...

ஜல்லிக்கட்டில் மிருக வதைக்கான ஆதாரம். அடங்க மறுக்கும் பீட்டா

சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற்ற போதிலும் மத்திய மாநில அரசுகள் பிரத்யேக சட்டம் இயற்றியதால் இந்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது.