கமல் ஒரு படிப்பறிவில்லாத முட்டாள். டுவிட்டரில் தொடரும் கமல்-சுவாமி போர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு போராடம் தொடங்கியது முதல் கமல்ஹாசனுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே டுவிட்டர் போர் தொடங்கி அந்த போர் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளால் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
சமீபத்தில் கமல்ஹாசனை சுப்பிரமணியன் சுவாமி முதுகெலும்பில்லாத முட்டாள் என்று விமர்சனம் செய்ய அதற்கு கமல்ஹாசன், ' நான் முரட்டுத்தனமாக பதில் அளிக்க மாட்டேன். என்னை விட அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம். எனக்கு சாப்பாட்டில் எலும்பு இருக்கனும், ஆனால் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் தான் பிடிக்கும் நன்றாக சாப்பிடுங்கள்' என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசனை வம்புக்கு இழுக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் 'கமல்ஹாசன் ஒரு பகட்டான முட்டாள். ஏனெனில் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என கூறிய கமல் நான் தமிழர்கள் அனைவரையும் பொறுக்கி என கூறியதாக வேண்டுமென்றே திரித்து கூறுகிறார் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி டுவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு பதில் கூறிய சுவாமி, 'கமல்ஹாசன் படிப்பறிவில்லாத ஆடம்பரமான முட்டாள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த விமர்சனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Kamal Hasan is a pompous idiot because he deliberately falsely twists that I said all Tamils are Porkis& opposed his entry into politics.
— Subramanian Swamy (@Swamy39) February 21, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com