நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள் நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் மட்டுமின்றி நாடே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது.

சசிகலாவின் அரசியல் வாழ்வை முடிவு செய்யும் இந்த தீர்ப்பு குறித்து அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், அரசியல் விமர்சகர்கள், திரையுலகினர் பல்வேறு கருத்துக்களை தொலைக்காட்சி பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த தீர்ப்பு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அவர், 'நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்' என்று பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும், ரீடுவீட்டுக்களும் குவிந்து வருகிறது.

More News

இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்-ராகரா லாரன்ஸ் சந்திப்பு

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு என்று விடை கிடைக்கும் என்று தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நாளை தீர்ப்பு உறுதி. அதிகாரபூர்வமான தகவல்

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை காலை 10.30 தீர்ப்பு வெளிவரவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது...

ஆளுனருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய அதிரடி யோசனை

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணக்கூடிய இடத்தில் இருக்கும் ஒரே நபரான தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது...

தமிழக உளவுத்துறை தலைவர் திடீர் மாற்றம்

கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் புயல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ் திடீரென மாற்றப்பட்டுள்ளார்...

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி?

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் எப்போது தீர்வு சொல்வார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த குழப்பத்திற்கு விடை நாளை சுப்ரீம் கோர்ட் மூலம் கிடைத்துவிடும் என தெரிகிறது...