முதல்முறையாக வர்த்தக விளம்பர படத்தில் கமல்ஹாசன்?

  • IndiaGlitz, [Monday,September 21 2015]

கோலிவுட்டில் ஒருசில வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்கள் கூட விளம்பரப்படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வரும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை எந்த நிறுவனத்தின் விளம்பர படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அவர் நடித்த ஒருசில விளம்பர படங்களும் எய்ட்ஸ் விழிப்புணர்வு, போலியோ விழிப்புணர்வு போன்ற சமூக அக்கறையுள்ள விளம்பரப் படங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் பிரபலமாக உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் இதுதான் கமல்ஹாசன் நடிக்கும் முதல் வர்த்தக விளம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளின் சிகிச்சைக்காக அவர் அளிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் தற்போது 'தூங்காவனம்' படத்தை முடித்துவிட்டதால் அடுத்த படத்திற்கு அவர் விரைவில் தயாராகவுள்ளார். மெளலி திரைக்கதையில், லிங்குசாமி தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா மீண்டும் இயக்கும் ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.