சென்ற முறை பணமதிப்பிழப்பு, இந்த முறை 370வது பிரிவு ரத்து: கமல்ஹாசன் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல். இது போன்ற முக்கியமான முடிவுகள் மீது பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எந்த விவாதத்தையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவினை எடுத்து இருக்கின்றது.
370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் இயற்றப்பட்தற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்ற திட்ட வேண்டும். 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை சட்ட பூர்வமாக நீக்கப்பட்டது குறித்து தனியாக விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகத்தின் எதிர்ப்புகளை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கின்றது.
சென்ற முறை பணமதிப்பிழப்பு, இந்த முறை 370-வது சட்டப்பிரிவை நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும் பிற்போக்கு தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் மீது மத்திய அரசின் அதிகாரத் தாக்குதல் குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருத்து.#MakkalNeedhiMaiam pic.twitter.com/ANpuMA45ga
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout