ஊழல் அரசியல்வாதிகளுக்கு கமல்ஹாசனின் தைரியமான விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை பரபரப்புடன் கூறி வருகிறார். கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்களை பெரும்பாலானோர் வரவேற்றாலும், ஒருசிலர் கமல், ஆளும் கட்சியின் ஊழலை மட்டுமே சுட்டிக்காட்டுவதாகவும், பிற ஊழல் கட்சிகளுடன் நட்புடன் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு கமல் தற்போது தன்னுடைய டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளதுள்ளார். என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும், சாடாத பிழை. கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழல்களையும் களைய முயல்வதென் கடமை. உமதும்` என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்னொரு பதிவில், 'நான் ஊழலுக்கு எதிரானவன். எல்லோரும் பயப்படுவதைப்போல நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. கிளர்ச்சியாளர்கள் எப்போதும் சாவுக்கும் தோல்விக்கும் அஞ்சமாட்டார்கள். நீங்கள்?` என்று பதிவு செய்துள்ளார்.
என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம்.எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்
— Kamal Haasan (@ikamalhaasan) July 26, 2017
Am against corrupttion.I am not against A party All guilty of it I revolt against Revolutionists are not afraid of death or failure. Are u?
— Kamal Haasan (@ikamalhaasan) July 26, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments