சரியான பதிலடி கொடுத்து விட்டார் நடிகர் கமல்ஹாசன்… தொண்டர்களின் கூற்றுக்கு என்ன காரணம்?
- IndiaGlitz, [Saturday,March 13 2021]
வரும் தமிழகச் சட்டச்சபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் போட்டி இடுக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி கோவை தெற்கு, ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று இருந்தது. மேலும் மயிலாப்பூர், திநகர் போன்ற தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்று இருந்தது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்திக்க உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிட வில்லை என்றாலும் நகர்ப்புறம் மற்றும் இளைஞர்களின் வாக்கு வங்கி இக்கட்சிக்கு கணிசமாக இருக்கிறது. இதனால் உற்சாகத்துடன் தேர்தல் களத்தில் மநீக செயல்பட்டு வருகிறது. மேலும் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலை நடிகர் கமல்ஹாசன் சந்திக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனத்திற்கு அவர் தக்கப்பதிலடி கொடுத்த இருப்பதாக கட்சித் தொண்டர்கள் பாராட்டி வருகின்றனர். காரணம் மநீக கட்சி தொடங்கியதில் இருந்தே நடிகர் கமல்ஹாசன் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று அவர் பாஜகவிற்கு சாதகமாகச் செயல்படுகிறார். மேல்தட்டு வர்க்க மக்களின் வாக்கு வங்கியை கவருவதற்கு முயற்சிக்கிறார். மயிலாப்பூர் தொகுதியில்தான் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று நடிகர் கமல்ஹாசன் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன் மீது வைக்கப்படும் இதுபோன்ற தூற்றல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதை தவிர்த்து இருக்கிறார். மேலும் பல்வேறு சாதி, மொழி இன மக்கள் கலந்து ஒன்றாக வாழும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் பாஜகவின் முக்கிய வேட்பாளரான வானதி சீனிவாசனை நேரடியாக அவர் தேர்தல் களத்தில் எதிர்கொள்ள இருக்கிறார். மேலும் காங்கிரஸ், பாஜக எனும் இருபெரும் தேசிய கட்சிகளை எதிர்த்தே தன்னுடைய தேர்தலை சந்திக்க இருக்கிறார். இதையொட்டித்தான் நடிகர் கமல்சானுக்கு தொண்டர்கள் புகழாராம் சூட்டி வருகின்றனர்.
மேலும் கொளத்தூர் பகுதியில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய வார்த்தைகளையும் அவருடைய கட்சி தொண்டர்கள் மீண்டும் நினைவுப்படுத்தி வருகின்றனர். அதில், “பகுத்தறிவாளனாக வாழும் என் மீது காவி சாயம் பூசுகிறார்கள்.. நான் நேர்மையில் குளித்தால் சாயம் கலைந்து விடும்” எனக் கூறி இருந்தார். அந்த வார்த்தைகளை எடுத்துக் காட்டும் தொண்டர்கள் சினிமாவிலும் அவர் பாணி தனிதான். தற்போது அரசியலிலும் அவர் தனி பாணியைத்தான் கடைப்பிடிக்கிறார். இதனால் சாதி, மத அடையாளத்திற்குள் சிக்கிக் கொள்ளமாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.