சச்சின் தெண்டுல்கருடன் கைகோர்த்தார் கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பு, இன்னொரு பக்கம் தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் கமல்ஹாசன் தற்போது கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் கைகோர்த்துள்ளார்.
ஆம், புரோ கபடி லீக் போட்டியில் சச்சின் தெண்டிலருக்கு சொந்தமானஅணியான தமிழ் தலைவாஸ் என்ற அணியின் விளம்பர தூதராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து 'தமிழ் தலைவாஸ்' அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புரோ கபடி லீகின் 5வது சீசனுக்கு பத்மபூஷன் டாக்டர் கமல்ஹாசன் அவர்களை பிராண்ட் அம்பாஸடராக அரிவிப்பதில் பெருமை கொள்கிறது தமிழ் தலைவாஸ். தனது நிகரில்லாத அனுபவங்களின் மூலம் எங்கள் வீரர்களை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக அவர் திகழ்வார் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். எங்களது இந்த பயணத்தில் அவரும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
திரு கமல்ஹாசன் அவர்களை பற்றி திரு நிம்மகட பிரசாத் அவர்கள் கூறுகையில், 'பல சவாலான தருணங்களில் திரு கமல்ஹாசன் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தன்னடக்கத்தை கண்டு நான் வியந்திருக்கின்றேன். அவரை தமிழ் தலைவாஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தோம். ஸ்போர்ட்ஸ் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு அவரது படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தெரிகிறது. நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கலைத்துறையில் பல சாதனைகள் புரிந்துள்ள அவரது தமிழ் பற்று அனைவரும் அறிந்ததே.
வாழக்கையின் போராட்டங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் திரு கமல்ஹாசன், கபடி யுத்த களத்தில் எங்களது வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்.
தமிழ் தலைவாஸுடன் இணைவதைப்பற்றி கமல்ஹாசன் கூறுகையில், 'கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். நமது முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தலைவாஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடிங்கள்.
புரோ கபடி போட்டி ஜூலை 28 முதல் அக்டோபர் 28 வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கமல்ஹாசன் விளம்பர தூதராக உள்ள 'தமிழ் தலைவாஸ்' அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments