ஜுலியால் ஒன்றிணைந்த நடிகர்கள்: பிக்பாஸ் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,June 29 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி உண்மையில் ரியாலிட்டி ஷோவா அல்லது அந்த டிவி ஒளிபரப்பும் மற்றொரு சீரியல் டிராமாவா? என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் 30 ரகசிய கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதில் பதிவாகும் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்புவதாக கூறப்பட்டாலும் சில காட்சிகளில் கேமிரா நகர்வதை பார்க்க முடிந்ததால் நெட்டிசன்கள் இந்த கேள்வியை கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நள்ளிரவு சரியாக 12 மணி அளவில் ஜல்லிக்கட்டு போராளி ஜூலி தூங்கிகொண்டிருக்கும்போது திடீரென மற்ற பங்கேற்பாளர்கள் 'ஹேப்பி பர்த்டே' என்று கூறி ஜூலியை எழுப்பி தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினர். மேலும் நடிகர்கள், நடிகைகள் உள்பட அனைவரும் ஜூலியை கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி தங்களுக்குள் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக நிரூபித்ததாகவும் கூறினர். நடிகர், நடிகையர் காட்டிய இந்த திடீர்ப்பாசத்தை கண்டு ஜூலிக்கு ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் தன்னை கட்டிபிடித்து வரவேற்க யாருமே இல்லை என்று ஜூலி கூறியதை அடுத்து நேற்று அனைவரும் கட்டிப்பிடித்து வாழ்த்து கூறி அவரை நெகிழ வைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித் படங்களை தொடர்ச்சியாக இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? இயக்குனர் சிவா

'வீரம்', 'வேதாளம்' வெற்றி படங்களை அடுத்து அஜித்தின் 'விவேகம்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் சிவா, ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் அஜித் படங்களை தொடர்ச்சியாக இயக்கிய வாய்ப்பு தனக்கு கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கியுள்ளார்.

பிக்பாஸ்: வையாபுரியின் அழுகைக்கு காயதிரியின் 'எச்ச'க்கும் என்ன காரணம்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கமல்ஹாசனின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒரு பக்கம் சுவாரஸ்யத்துடன் போய்க்கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சியில் உள்ள குறைகளை மிமி கிரியேட்டர்களுக்கு தங்கள் கற்பனைத்திறன் மூலம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தண்டனை அறிவிப்புக்கு முன்னரே திடீரென மரணம் அடைந்த மும்பை வெடிகுண்டு குற்றவாளி

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய சம்பவம் மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம்.

'இமைக்கா நொடிகள்' கிளைமாக்ஸ்: இடத்தை இறுதி செய்த நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

ஜிஎஸ்டி எதிரொலி: ரூ.120 தியேட்டர் டிக்கெட் இனி எவ்வளவு தெரியுமா?

இந்தியா முழுவதும் வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது.